ஷார்ஜாவில் சிறப்புடன் நடைபெற்ற பெண்களுக்கான நேரமேலாண்மை நிகழ்ச்சி

பெண்களுக்கான நேர மேலாண்மை நிகழ்ச்சி 07.12.2012, வெள்ளிக் கிழமை அன்று ஷார்ஜாவில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் தலைமை வகித்த பெண் பொறியாளர் ஜம்ரத் ஜாஹீர் அவர்கள் நிகழ்ச்சியின் முக்கியத்துவம் குறித்தும், இதற்கு முன்பு இந்த நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட மக்கள் மத்தியில் ஏற்பட்ட மன மாற்றங்கள் குறித்தும் விளக்கினார்.

 

நேர மேலாண்மை குறித்த இஸ்லாமிய பார்வை, இலக்குகளைத் தீர்மானித்தல், முன்னுரிமை கொடுக்க வேண்டிய செயல்கள், திட்டமிடுதலின் அவசியம், வேலைகளைத் தள்ளிப் போடாமல் உடனே செய்வதனால் ஏற்படும் பலன்கள், செய்முறை பயிற்சி ஆகியவற்றைக் குறித்து பெண்  பொறியாளர் ஷாமிலா அவர்கள் பயிற்சியளித்தார்.

 

நிகழ்ச்சியின் இறுதியில் நஸ் ரீன் பர்வீன் அவர்கள் நன்றியுரையாற்றி, துவா ஓதி நிகழ்ச்சியை நிறைவு செய்தார். பெண்களை ஒருங்கிணைக்கும் பணியை பௌசியா ஜாஹீர் அவர்களின் தலைமையிலான குழுவினர் சிறப்பாக செய்தனர். ஷார்ஜா மண்டல தமுமுக சார்பாக இந்நிகழ்ச்சியை அமீரக செயற்குழு உறுப்பினர் இக்பால், மண்டலத் தலைவர் அபுல் ஹசன், ஜைனுதீன் உள்ளிட்டவர்கள் ஏற்பாடு செய்திருந்தனர். கலந்துக் கொண்டவர்கள் அனைவருக்கும் குறிப்பேடுகள், சிற்றுண்டி இலவசமாக வழங்கப்பட்டது.

 

பெண்களுக்கான நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வதற்கு பெண்கள் அதிகம் ஆர்வமாக இருப்பதாகவும், உணர்வாய் உன்னை, நேர மேலாண்மை நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து மன அழுத்த மேலாண்மை, ஆண்-பெண் புரிதல் குறித்த ஆய்வு, குழந்தை வளர்ப்பு கலை போன்றவற்றைக் குறித்து வடிவமைக்கபட்ட நிகழ்ச்சிகள் எதிர்வரும் காலங்களில் ஏற்பாடு செய்யப்படும் என நிகழ்ச்சியின் இயக்குநர் ஹூசைன் பாஷா தெரிவித்தார்.

No comments:

Post a Comment