ஜித்தாவில் நடைபெற்ற நேர மேலாண்மை பயிற்சி முகாம்

28-03-2014 அன்று ஜித்தா இஸ்லாமிய அழைப்பு மையத்தில் நடைபெற்ற நேர மேலாண்மை பயிற்சி முகாமில் தமுமுக சவுதி மேற்கு மண்டலத் தலைவர் அப்துல் மஜித் தலைமை தாங்கினார்.தமுமுக ஜித்தா மண்டலத் தலைவர் மௌலவி இம்தாதுல்லாஹ் ஜமாலி கிராத் ஓதினார். தமுமுக சவுதி மேற்கு மண்டலத் துணை செயலாளர் கீழை. இர்பான் அறிமுக உரையாற்றினார்.பல்வேறு நாடுகளிலும் நடத்தப்பட்ட இந்த நிகழ்ச்சியை மிகவும் பயனுள்ள வழியில் தமுமுக அமீரக துணைத்தலைவர் ஹூசைன் பாஷா சிறப்பாக நடத்தினார்.தமுமுக மேற்கு மண்டலத் துணைத்தலைவர் இபுராகிம் அவர்கள் நன்றியுரையாற்றினார். ஜித்தா தமுமுக நிர்வாகிகள் ராஜா முகம்மது அப்துல் மஜித் மற்றும் இஸ்லாமிய அழைப்பு மையம் சார்பாக சலீம் நிகழ்ச்சியை சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனார். திரளாக சகோதரர்கள் கலந்துகொண்டு பயனடைந்தனர்.

No comments:

Post a Comment